aa

2018 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீஹேவிளம்பி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 17ம் தேதி, 01 ஜனவரி 2018, திங்கட்கிழமையும் சுக்ல சதுர்த்தசியும் மிருகசீர்ஷ நக்ஷத்ரமும் சுப்ர நாமயோகமும் வணிஜை கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12 மணிக்கு கன்னியா லக்னத்தில் ரிஷப நவாம்சமும் மகர திரிகோணமும் கொண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

சந்திரனின் ஆதிக்கம் பெற்ற எண்: 2018:

இந்த வருடத்தின் கூட்டு எண்: 2+0+1+8=11=2. இரண்டு என்பது சந்திரனின் ஆதிக்கம் பெற்ற எண். அம்பாளுக்கு அதிலும் குறிப்பாக ஆதிபராசக்திக்கு உகந்த எண் இரண்டாகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாயும் குருவும் இணைந்து பயணிக்கிறார்கள். லக்னாதிபதி புதன் தைரிய வீர்ய ஸ்தானத்தில் தனது சுய சாரம் பெற்றிருக்கிறார். தனவாக்கு பாக்கியாதிபதி சுக்கிரனும் சுக சப்தமாதிபதி குருவும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். பஞ்சமாதிபதி தொழில்காரகனான சனி சுக ஸ்தானத்தில் கேது சாரம் பெற்றிருக்கிறார். லாபாதிபதி சந்திரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராகு லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்.

இந்த ஆண்டில் குருபகவானின் தனஸ்தான இருப்பால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் காரகன் சனி தனது ஏழாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் வளர்ச்சி அடையும். சுக்கிரன் தனது சுய சாரம் பெற்று இயங்குவதால் பங்குசந்தைகள் நல்ல வளர்ச்சி காணும். பொருளாதார நிலைமை உச்ச நிலைக்கு செல்லும். ரியல் எஸ்டேட் துறை படிப்படியாக முன்னேற்றம் அடையும். அதிகமான திருமணங்கள் நடைபெறும். குழந்தைபிறப்பு விகிதம் அதிகமாகும். குரு இருக்கும் வீடு அசுர குரு வீடாக அமைந்திருப்பதால் அதிகமாக காவல் தெய்வ கோவில்களுக்கு புணரமைப்பு நடந்து கும்பாபிஷேகங்கள் நடைபெறும். சூரியன் சனி இணைவு இருப்பதால் அரசாங்கம் ரீதியாக பிரச்னைகள் அதிகரிக்கும். இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து அதிகமான பிரச்னைகள் ஏற்படலாம். ராணுவம் பலம் பெற்று நாட்டைக் காப்பாற்றும். மழை வளம் சிறப்பாக இருக்கும். 

பொதுப் பலன்கள்:

குரு சுக்கிரன் பரிவர்த்தனை ஏற்பட்டிருப்பதால் சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் தங்கு தடையின்றி நடந்து முடியும். குருவின் சஞ்சாரத்தால் கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். சுக்ரன் தனது சுய சாரம் பெற்றிருப்பதால் கலைத்துறை செழிக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் - டீசல் - கச்சா எண்ணை - சமையல் எண்ணை விலை அதிகமாக உயரும். புத்தாண்டு பிறக்கும் போது உள்ள புதனின் இருப்பால் இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் - வெள்ளி விலையும் உயரும். நிறைய காவல் தெய்வ ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு மிதமாக இருக்கும். சராசரி வெயில் அளவை இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். அண்டார்டிகா - அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் - ஆப்ரிக்காவை சார்ந்த நாடுகள் - சுமத்ரா தீவு - ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்து கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள். 

இந்த ஆண்டு நடைபெறும் முக்கிய கிரக பெயர்ச்சிகள் - வாக்கிய பஞ்சாங்கப்படி:

குருப் பெயர்ச்சி:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 18ம் நாள் (04.10.2018) வியாழக்கிழமை அன்று குரு பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் ரிஷப ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் கடக ராசியையும் பார்க்கிறார்.

இந்தாண்டு சனிப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இல்லை.


mesham rishabam mithunam kadakam simmam kanni thulam viruchigam dhanush magaram kumbam meenam