மிஸ்டர் சந்திர மெளலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Author: Disha | Posted Date : 11:00 (29/05/2018) A+       A-

மிஸ்டர் சந்திர மெளலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

May 29


80 - களில் கொடி கட்டிப் பறந்தவர் கார்த்திக். அந்த கால பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர். தன்னுடைய நடிப்பிற்காக நவரச நாயகன் எனப் பெயர் பெற்றவர். இவரது மகன் கவுதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படம்களில் நடித்திருக்கும் இவர் முதன் முறையாக தனது அப்பா கார்த்திக்குடன் நடித்திருக்கிறார். படத்தின் பெயர் மிஸ்டர் சந்திர மெளலி.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் நடித்த, மெளனராகம் படத்தில் இந்த டயாலாக் இடம் பெற்றிருக்கும். கார்த்திக்கின் வித்தியாசமான உச்சரிப்பில் இந்த வசனம் ஃபேமஸ் ஆனது. மிஸ்டர் சந்திர மெளலி படத்திலும் அப்பா – மகனாகவே கவுதமும் கார்த்திக்கும்  நடித்துள்ளனர். பாக்ஸராக கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரெஜினா , வரலக்ஷ்மி சரத்குமார், சதிஷ், மஹேந்திரன் போன்றவர்கள் நடித்துள்ளனர். படத்தினை திரு இயக்கியுள்ளார். சாம் இசை அமைத்துள்ளார்.

ஏற்கனவே இதன் பாடல்களும் , ட்ரைலரும் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் படத்தை ஜூலை 6-ம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள்.


RELATED STORIES