புதிய தோற்றத்தில் அனுஷ்கா ஷர்மா - சஞ்சு போஸ்டர்
Author: Disha | Posted Date : 07:00 (30/05/2018) A+       A-

புதிய தோற்றத்தில் அனுஷ்கா ஷர்மா - சஞ்சு போஸ்டர்

May 30


இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தற்போது இயக்கி வரும் படம் 'சஞ்சு'. நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். தியா மிர்ஸா சஞ்சய் தத்தின் மனைவியாகவும், அனுஷ்கா ஷர்மா வக்கீலாகவும், சோனம் கபூர் டீனா அம்பானியாகவும் நடிக்கிறார்கள். சட்ட விரோத ஆயுதக் கடத்தலுக்காக பல வருடம் சஞ்சய் தத் ஜெயிலில் இருந்தார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் அவரது சொந்த வாழ்க்கை, எந்த சூழ்நிலை அவரை குற்றவாளியாக்கியது என்பதை இந்தப் படம் மூலம் தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். 

சில நாட்களுக்கு முன்பே சஞ்சு படத்தின் டீசரும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி இருந்தது. இதில் வித்தியாசமான கெட்டப்புகளில் ரன்பீர் தோன்றியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் சஞ்சுவின் டீசரும் ஃபர்ஸ்ட் லுக்கும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது அனுஷ்கா ஷர்மா இடம் பெற்றுள்ள மற்றொரு போஸ்டர் வெளியாகியுள்ளது. எப்போதும் ஸ்ட்ரைட் அல்லது செமி கர்லிங் முடியில் நாம் பார்த்து பழகிய அனுஷ்கா ஷர்மா இதில் முழுக்க முழுக்க சுருட்டை முடியில் இருக்கிறார். 






RELATED STORIES