29-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?
Author: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் | Posted Date : 09:45 (28/05/2018) A+       A-

29-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

May 28
1 / 13 Free-Daily-astrology-29-5-201829-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன்கள் மற்றும் இன்றைய பஞ்சாங்கம்...

விளம்பி வருஷம் I உத்தராயணம் I வஸந்தருது

வைகாசி 15 I இங்கிலீஷ்: 29 May 2018 I செவ்வாய்க்கிழமை

பௌர்ணமி இரவு 8.23 மணி வரை. பின் பிரதமை I அனுஷம் இரவு 1.29 மணி வரை. பின் கேட்டை

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 I எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30

சூலம்: வடக்கு I பரிகாரம்: பால் I இன்று சம நோக்கு நாள் I பௌர்ணமி.

திதி:பௌர்ணமி I சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை

2 / 13 Free-Daily-astrology-29-5-201829-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

மேஷம்:

இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மேற்படிப்பு கிடைக்கப் பெறுவீர்கள். தந்தையாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் மனம் நிம்மதி பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

3 / 13 Free-Daily-astrology-29-5-201829-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

ரிஷபம்:

இன்று சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது மாணவர்களை பிரச்னைகளிடமிருந்து காப்பாற்றும். எதிர்பார்த்த பாடங்களில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

4 / 13 Free-Daily-astrology-29-5-201829-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

மிதுனம்:

இன்று வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவமணிகளுக்கு அவ்வப்போது குழப்பங்களும், சஞ்சலமும் தோன்றி மறையும். கல்வி நலனை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது உங்களிடம் தான் உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

5 / 13 Free-Daily-astrology-29-5-201829-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

கடகம்:

இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். செமஸ்டர் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள். ஞாபக சக்தி நல்லபடியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

6 / 13 Free-Daily-astrology-29-5-201829-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

சிம்மம்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. மாணவமணிகளுக்கு மேற்படிப்பிற்கான வாய்ப்பு தாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு சிலரின் முயற்சியால் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அது உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

7 / 13 Free-Daily-astrology-29-5-201829-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

கன்னி:

இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும். மாணவர்கள் கவனமாக படிப்பது நல்லது. அதிலும் தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்கள் கொஞ்சம் கூடுதலாக பாடுபட வேண்டியிருக்கும். தலைவலிதான் என்றாலும் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

8 / 13 Free-Daily-astrology-29-5-201829-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

துலாம்:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப் பெற்று உற்சாகத்துடன் திகழ்வீர்கள். பெற்றோர் உறு துணையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

9 / 13 Free-Daily-astrology-29-5-201829-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

விருச்சிகம்:

இன்று ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 9ல் இருப்பதால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். இந்த வாரம், மாணவமணிகள் பெற்றோர், பெரியோர் துணையின்றி வெளியிடங்களுக்கு தனியாகச் செல்ல வேண்டாம். படிப்பில் மனம் ஈடுபட மறுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

10 / 13 Free-Daily-astrology-29-5-201829-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

தனுசு:

இன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மாணவர்கள் நெருங்கிய நண்பர்களே ஆனாலும் அவர்களிடம் எல்லை மீறி பழகாமலிருப்பது நல்லது. படிப்பில் கவனத்தைச் செலுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9, 3

11 / 13 Free-Daily-astrology-29-5-201829-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

மகரம்:

இன்று கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கிரகிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். யாரிடமும் விட்டுக் கொடுத்து காரியத்தை நிகழ்த்துங்கள். முடிவு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

12 / 13 Free-Daily-astrology-29-5-201829-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

கும்பம்:

இன்று வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. மாணவ மணிகள் சிலருக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கிரகிப்புத்திறனும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

13 / 13 Free-Daily-astrology-29-5-201829-5-2018 தினப்பலன்கள்! மாணவர்களுக்கு இன்று எப்படி இருக்கும்?

மீனம்:

இன்று மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மாணவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வெளிநாடுகளில் உயர்கல்வி முடித்த மாணவ மணிகளுக்கு இந்த வாரம், அங்கேயே நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 7

GO BACK