ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத்தடை!
Author: Newstm Desk | Posted Date : 10:56 (30/05/2018) A+       A-

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத்தடை!

May 30


ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

மத்திய முன்னாள்  நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்  மீது ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த போதும், டெல்லி சிபிஐ நீதிமன்றம் கார்த்திக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. வரும் ஜூலை 10ம் தேதி வரை கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் ஜாமின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து ஏர்செல்- மேக்சிஸ் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் ப. சிதம்பரம் முன்ஜாமின் கோரி டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு அளித்தார். இன்று அந்த மனு மீதான விசாரணையில், ஜுன் 5ம்  தேதி வரை ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் 5ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக ப.சிதம்பரத்திற்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.