ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலும் முன்ஜாமின் கேட்ட ப.சிதம்பரம்!
Author: Newstm Desk | Posted Date : 03:20 (30/05/2018) A+       A-

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலும் முன்ஜாமின் கேட்ட ப.சிதம்பரம்!

May 30


ஏர்செல்- மேக்சிஸ் வழக்கைத் தொடர்ந்து ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கிலும் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 

மத்திய முன்னாள்  நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு அளித்தார். இன்று அந்த மனு மீதான விசாரணையில், ஜுன் 5ம்  தேதி வரை ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் 5ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக ப.சிதம்பரத்திற்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து  ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கிலும் ப.சிதம்பரம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு அளித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது.

முன்னதாக, சிபிஐ அலுவலகத்தில் நாளை(மே.31) ப.சிதம்பரம் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என சிபிஐ உத்தரவிட்டிருந்தது.

மேலும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.