டெல்லியில் 4 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் சீண்டல்: சக மாணவர் மீது வழக்குப்பதிவு!
Author: Newstm Desk | Posted Date : 09:00 (06/12/2018) A+       A-

டெல்லியில் 4 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் சீண்டல்: சக மாணவர் மீது வழக்குப்பதிவு!

Dec 06

டெல்லியில் 4 வயது பள்ளி சிறுமி, சக மாணவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, போஸ்கோ(POSCO) சட்டத்தின் கீழ் சம்மந்தப்பட்ட மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரபல பள்ளி ஒன்றில் 4 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் வகுப்பு தோழர்கள் அல்லது அப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் ஒருவர் தனது 4 வயது மகளினை பாலியல் ரீதியாக தூண்டியுள்ளதாக சிறுமியின் தாயார் ரன்ஹோலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பிறப்புறுப்பிற்கு அருகே காயம் இருப்பதையறிந்த பெற்றோர், அதற்கு காரணம் யார் என் தெரியாத நிலையில் பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.

பின்னர் காவல்துறை இது தொடர்பான விசாரணையில், சம்மந்தப்பட்ட சிறுவன் மீது POCSO சட்டம் பிரிவு 6-ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெறு வருகிறது. 

newstm.in