மே.29, 2018 - உலக செய்திகள்
Author: Padmapriya | Posted Date : 07:40 (29/05/2018) A+       A-

மே.29, 2018 - உலக செய்திகள்

May 29
1 / 5 BREAKING-NEWSமே.29, 2018 - உலக செய்திகள்

குழந்தைகள் உள்பட 10 பேரின் தலையை துண்டித்து கொன்று பயங்கரவாதிகள் வெறிச்செயல்

தெற்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் உள்ள கிராமம் ஒன்றில் போலீசுக்கு துப்பு கொடுத்ததால் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேரின் தலையை துண்டித்து பயங்கரவாதிகள் கொடூரமாக கொன்றுள்ளனர்.

2 / 5 BREAKING-NEWSமே.29, 2018 - உலக செய்திகள்

அயர்லாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு சவீதா பெயர்- போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

அயர்லாந்தில் புதிதாக உருவாக்கப்படும் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு இந்திய பெண் சவீதா பெயரை சூட்ட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 / 5 BREAKING-NEWSமே.29, 2018 - உலக செய்திகள்

கூகுள் சர்வர் குறைபாட்டை சுட்டிகாட்டிய சிறுவனுக்கு பரிசு

உருகுவே நாட்டைச் சேர்ந்தஎஸ்க்வீயல் பெரேரா என்ற 17 வயது சிறுவன், கூகுள் சர்வர்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டி இதன் மூலம் ஹெக்கர்கள் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளார். இதையடுத்து அந்த குறைபாட்டை சரி செய்த கூகுள் நிறுவனம், பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்த சிறுவனுக்கு 24 லட்ச ரூபாய் பரிசாக கொடுத்துள்ளது.

4 / 5 BREAKING-NEWSமே.29, 2018 - உலக செய்திகள்

சீனாவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சூறாவளி

சீனாவின் சோங்யுவான் (songyuvan) மாகாணத்தில் நேற்று காலை மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி 7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஜிலின் ((Jilin)) மாகாணத்திலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதைத் தொடர்ந்து பலத்த சூறாவளிக் காற்று அங்கு வீசியதில் குடியிருப்புகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ஏராளமான மரங்களும் ஆங்காங்கே சாய்ந்துகிடந்தன.

5 / 5 BREAKING-NEWSமே.29, 2018 - உலக செய்திகள்

நிலவுக்கு சென்ற 4வது விண்வெளி வீரர் ஆலன் பீன் உயிரிழந்தார்:

சந்திரனில் நடந்த நாலாவது விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஆலன் பீன் உடல்நலக் குறைவால் காலமானார்.

GO BACK