ஏமன் போரை நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை துவங்கியது!
Author: Newstm Desk | Posted Date : 09:31 (06/12/2018) A+       A-

ஏமன் போரை நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை துவங்கியது!

Dec 06

4 ஆண்டுகளாக ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர, ஐநா-வின் மத்தியஸ்தத்தோடு அமைதி பேச்சுவார்த்தைகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் துவங்கியது.  

ஏமன் அரசுக்கு எதிராக போர் தொடுத்த ஹுதி கிளர்ச்சியாளர்கள், தலைநகர் சனாவை கைப்பற்றி, தாங்கள் தான் அந்நாட்டை ஆண்டு வருவதாக தெரிவித்து வருகின்றனர். தலைநகரில் இருந்து தப்பிய ஏமன் அதிபர் அப்தரப்பா மன்சூர் ஹதி, ஏடன் நகரில் வசித்து வருகிறார். சவூதி ராணுவத்தின் கூட்டணியுடன் இருக்கும் அவரது அரசையே சர்வதேச நாடுகள் ஏமன் அரசாக ஒப்புக்கொண்டுள்ளன.

4 வருடங்களாக ஏமன் அரசுக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் உள்நாட்டு நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தைக்கு ஐநா ஏற்பாடு செய்திருந்தது. இன்று, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், ஏமன் அரசும், ஹூதி கிளர்ச்சியாளர்களும் பேச்சுவார்த்தையை துவங்கினர். இந்த பேச்சுவார்த்தையை ஏமனுக்கான ஐநா தூதர் மார்ட்டின் க்ரிப்பித்ஸ், மத்தியஸ்தம் செய்து வைக்கிறார். 

இரண்டு தரப்பில் இருந்தும் கைதிகளை விடுவிப்பது இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in