இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது: நாசா அதிர்ச்சித் தகவல்
Author: NEWSTM DESK | Posted Date : 11:00 (19/05/2018) A+       A-

இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது: நாசா அதிர்ச்சித் தகவல்

May 19

பூமியின் மண்டலங்களை ஆய்வு செய்து வரும் நாசா, இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

உலக அளவில் 34 மண்டலங்களை சுமார் 14 ஆண்டுகளாக நாசா ஆய்வு செய்து வருகிறது. அதன் விஞ்ஞானிகள் அதன் முதற்கட்ட தகவல்களை தற்போது வெளியிட்டு உள்ளனர்.

இதில் பூமியின் ஈரப்பதம் மிகுந்த பகுதிகள் மேலும் ஈரமாகவும், உலர்ந்த பகுதிகள் மேலும் உலர்ந்து கொண்டே போவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு மோசமான நீர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை சுழற்சி உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.


இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள், கலிபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் ஆன பிரச்னைகள் உருவாகி இங்கு ஏற்கெனவே உருவாகிவிட்டதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுக்காலத்தில் வட இந்தியாவில் போதுமான மழை இருந்த நிலையிலும் அரிசி, கோதுமை போன்ற பயிர்களுக்காக நிலத்தடி நீர் அதிக அளவில் உறியப்பட்டதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது நிலத்தடியில் நிலவும் வறட்சிக்கு எடுத்துக்காட்டு என்று நாசா கூறியுள்ளது. 


இது எதிர்கால வறட்சிக்கு நல்லதல்ல என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், பூமியை பொறுத்தவரை நிலத்தடி நீரே மிகவும் அத்தியாவசியமான வளம் என்று குறிப்பிட்டுள்ளனர்.