பிரெஞ்சு ஓபன்: இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தோல்வி
Author: Newstm Desk | Posted Date : 12:23 (30/05/2018) A+       A-

பிரெஞ்சு ஓபன்: இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தோல்வி

May 30


பிரெஞ்சு ஓபன் போட்டியில் இந்திய டென்னிஸ் வீரர் யுகி பாம்ப்ரி ஒற்றையர் பிரிவில் இருந்து வெளியேறினார். 

ரோலண்ட் கர்ரோஸ் என்னும் பிரெஞ்சு ஓபன் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு துவக்க ஆட்டத்தில், இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, பெல்ஜியம் வீரர் ரூபென் பேமெல்மன்சுடன் மோதினார். இரண்டு மணி நேரம் 10 நிமிடம் நடந்த இப்போட்டியில் பேமெல்மன்ஸ் 6-4, 6-4, 6-1 என பாம்ப்ரியை வீழ்த்தி, ஒற்றையர் போட்டியில் இருந்து வெளியேற்றினார்.

இரட்டையர் போட்டியில் பாம்ப்ரி - ஷரனுடன் இணைந்து, புராவ் ராஜா- பாபிரீஸ் மார்ட்டின் இணையை துவக்க போட்டியில் சந்திக்கின்றார். 

மற்றொரு இரட்டையர் போட்டியில் இந்திய வீரர் ரோஹன் போபண்ணா - ரோஜர் வஸ்ஸலினுடன் சேர்ந்தது துவக்க போட்டியில் வெற்றி அடைந்தார்.