ஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Author: Newstm Desk | Posted Date : 02:27 (30/05/2018) A+       A-

ஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

May 30


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அரசு எங்களது கோரிக்கையை நிராகரிக்காவிட்டால்  வருகிற ஜூன் 2ம் தேதி தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தி.மு.க தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவின் மாதிரி சட்டசபைக்கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தி.மு.க, காங்கிரஸ்,  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்  உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டுள்ளனர். தி.மு.க கொறடா சக்ராபாணி, சபாநாயகராக இருந்தார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸூம் இதில் கலந்துகொண்டு பேசினார். 


இந்த மாதிரி சட்டசபை கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, அமைச்சரவையை கூட்டி அரசாணை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வருகிற ஜூன் 2ம் தேதி தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்" என தெரிவித்தார்.