ரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு!
Author: Newstm Desk | Posted Date : 03:38 (30/05/2018) A+       A-

ரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு!

May 30


போராட்டங்கள் எச்சரிக்கையோடு நடைபெற வேண்டும் என ரஜினிகாந்த் கூறியது வரவேற்கத்தக்கது என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மக்களை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, "ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்தது தான் கலவரத்திற்கு காரணம். சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மக்கள் போராட்டம் நடத்தும் போது எச்சரிக்கை தேவை. அமைதியான முறையில் போராட வேண்டும். அரசும் அவர்களுக்கு போராட அனுமதி கொடுக்கும் போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்" என பேசினார். 

இவரது பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொதுமக்களின் போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுறுவியதால்தான் வரம்புமீறி உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது.. ஆக, போராட்டங்கள் எச்சரிக்கையோடு நடைபெறவேண்டும் என்ற நிலையை சமூக அக்கறையோடு எடுத்துச் சொன்ன ரஜினிகாந்த்தின் கருத்தை வரவேற்கிறேன். உண்மைநிலையை விமர்சனங்களையும் மீறி எடுத்துச்சொல்வதே சரி!" என குறிப்பிட்டுள்ளார்.