பிரேமம் படம் வெளியாகி இன்றுடன் 3 வருடங்கள்!
Author: Disha | Posted Date : 02:14 (29/05/2018) A+       A-

பிரேமம் படம் வெளியாகி இன்றுடன் 3 வருடங்கள்!

May 29


தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொண்ட பிற மொழி படங்களில் மிக முக்கியமானப் படம் 'பிரேமம்'. ரசிப்பதற்கும், கலையைக் கொண்டாடுவதற்கும் மொழி ஒரு தடையில்லை என்பது போல, மொத்த சினிமா ரசிகர்கள் அனைவரும் இதனை கொண்டாடினார்கள். 

நேரம் படத்தை இயக்கிய ஆல்போன்ஸ் புத்திரன் இதனை இயக்கியிருந்தார். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா, அனுபமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த மூன்று நடிகைகளுமே இந்தப் படத்தில் தான் அறிமுகமானார்கள். இவர்களின் சினிமா பயணத்திற்கு இது ஒரு முக்கிய படமாக அமைந்தது என்று கூறலாம். முக்கியமாக மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அவரது இயற்கையான அழகும், பக்கத்து வீட்டுப் பெண் தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

சென்னையில் மட்டும் பிரேமம் படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. பிறகு நாக சைத்தன்யா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப் பட்டது. ஆனால், தெலுங்கு படம் மலையாளம் அளவுக்கு ஈர்க்கவில்லை.

இன்றுடன் பிரேமம் வெளியாகி 3 வருடங்கள் ஆகியிருக்கிறது. இதனை நிவின்பாலி ட்விட்டரில் நினைவு கூர்ந்துள்ளார். 


RELATED STORIES
MORE FROM cinema