ஐரோப்பாவில் டூயட் பாடும் விக்ரம்-கீர்த்தி சுரேஷ்
Author: Disha | Posted Date : 07:10 (30/05/2018) A+       A-

ஐரோப்பாவில் டூயட் பாடும் விக்ரம்-கீர்த்தி சுரேஷ்

May 30


15 வருடம் கழித்து தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குநர் ஹரி. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பிரபு, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இதற்கு சாமி ஸ்கொயர் என டைட்டில் வைத்திருக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றிருந்தது. அதே போல் சாமி-2 படத்தின் ஸ்டில்களும் வெளியாகி இணையத்தைக் கலக்கின.

டெல்லி, ஜெய்சால்மீர், ஏற்காடு, ஆகிய இடங்களிலுள்ள, ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஒரு பாடலை மட்டும் வெளிநாட்டில் எடுக்கும் திட்டத்தில் இருந்தார்கள் படக்குழுவினர். 

ஆனால் எங்கு எடுக்கலாம் என்ற தேடலில் இருந்தவர்கள், தற்போது ஐரோப்பாவை 'டிக்' செய்துள்ளனர். அதனால் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் படக்குழு ஐரோப்பா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு விக்ரம், கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடுவது போல் ஒரு பாடல் காட்சியை படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் சாமி 2 குழுவினர். 


RELATED STORIES
MORE FROM cinema