இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியா அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிப்பு
Author: Newstm Desk | Posted Date : 02:20 (30/05/2018) A+       A-

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியா அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிப்பு

May 30


இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணிக்கு மிட்செல் மார்ஷ் தலைமை தாங்க உள்ளார். 

வருகிற செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு நாள் மற்றும் ஒரு நாள் போட்டியில் பங்கேற்க உள்ளது. இதில் விஷக்கப்பட்டினத்தில் நடைபெறும் நான்கு நாள் போட்டிக்கான ஆஸ்திரேலியா ஏ அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்தவர் மார்ஷ்.  

மேலும், ஆகஸ்ட் மாதம் விஜயவாடாவில் நடக்க உள்ள ஒரு நாள் முத்தரப்பு போட்டிக்கு ஆஸ்திரேலியா ஏ அணியை டிராவிஸ் ஹெட் வழி நடத்த இருக்கிறார். இந்தியா ஏ மற்றும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் முத்தரப்பு தொடரில் பங்கேற்கின்றன. 

அட்டவணை:

ஆஸ்திரேலியா ஏ ஒரு நாள் போட்டிகள் - விஜயவாடா

17 ஆகஸ்ட்: ஆஸ்திரேலியா - இந்தியா ஏ

19 ஆகஸ்ட்: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா ஏ

23 ஆகஸ்ட்: ஆஸ்திரேலியா -  இந்தியா ஏ

25 ஆகஸ்ட்: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா ஏ

29 ஆகஸ்ட்: முத்தரப்பு இறுதிச் சுற்று

ஆஸ்திரேலியா ஏ நான்கு நாள் போட்டிகள் - விஷக்கப்பட்டினம்

2 - 5 செப்டம்பர் - ஆஸ்திரேலியா - இந்தியா ஏ

8 - 11 செப்டம்பர் - ஆஸ்திரேலியா - இந்தியா ஏ


RELATED STORIES
MORE FROM sports